லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

புதுமணத் தம்பதிகளுக்கு விழிப்புணர்வு முகாம்

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு அருகேயுள்ள அச்சங்குளம் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் புதுமணத் தம்பதிகளுக்கான விழிப்புணர்வு முகாம்

Updated On :28 மே 2014, 6:48 pm

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு அருகேயுள்ள அச்சங்குளம் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் புதுமணத் தம்பதிகளுக்கான விழிப்புணர்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

      முகாமிற்கு ஊராட்சி மன்றத் தலைவர் ஈஸ்வரன் தலைமை தாங்கினார். குழந்தைகள் வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர்கள் கலைச்செல்வி, லெட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுமார் 100-க்கும் மேற்பட்ட புதுமணத் தம்பதிகள் முகாமில் கலந்து கொண்டனர். அனைவருக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

         குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகளுக்கு எப்படி தீர்வு காண்பது என லெட்சுமி விளக்கிப் பேசினார். புதுமணத் தம்பதிகளுக்கு விளையாட்டு போட்டி, பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்ற புதுமணத் தம்பதிகளுக்கு ஊராட்சி மன்றத் தலைவர் ஈஸ்வரன் பரிசு வழங்கினார். முகாமுக்கான ஏற்பாடுகளை காரியாபட்டி குழந்தைகள் வளர்ச்சி திட்ட முகாம் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.