லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

திருச்சுழி பகுதியில் விவசாயிகளுக்கான ஆய்வு முகாம்

திருச்சுழி பகுதியில் நடமாடும் மண்பரிசோதனை நிலையம் மூலம் நடைபெற்ற ஆய்வு முகாமில் விவசாயிகள் பங்கேற்றனர். திருச்சுழி பகுதியில் நடமாடும் மண்பரிசோதனை நிலையம் மூலம் மண்ணாய்வு கட

Updated On :11 மே 2014, 6:39 pm

திருச்சுழி பகுதியில் நடமாடும் மண்பரிசோதனை நிலையம் மூலம் நடைபெற்ற ஆய்வு முகாமில் விவசாயிகள் பங்கேற்றனர்.

திருச்சுழி பகுதியில் நடமாடும் மண்பரிசோதனை நிலையம் மூலம் மண்ணாய்வு கடந்த சில தினங்களாக நடைபெற்று வருகிறது. மண்டபசாலை, எம்.ரெட்டியபட்டி ஆகிய கிராமங்களில் நேரடி மண்ணாய்வு பணி மேற்கொள்ளப்பட்டது. விவசாயிகள் தங்களது நிலத்தின் மண் மற்றும் தண்ணீர் மாதிரிகளை ஆய்வு செய்வதற்கு மண் மாதிரிகளுடன் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். மண் ஆய்வின் முக்கியத்துவம் குறித்து விவசாயிகளிடம் எம்.ரெட்டியபட்டி வேளாண்மை உதவி இயக்குநர் விரிவாக விளக்கினார். மண் பரிசோதனை செய்வதன் மூலம் தங்களது நிலத்தின் தன்மை மற்றும் சத்துக்கள் பற்றியும், மண்ணில் உள்ள பிரச்னைகள் குறித்தும், வயலில் இடவேண்டிய பேரூட்ட மற்றும் நுண்ணூட்ட உரங்கள் குறித்தும், நில சீர்திருத்தங்கள் குறித்தும், நிலத்திற்கேற்ற பயிர் சாகுபடி குறித்தும் தெரிந்து கொள்ளலாம். வேளாண்மை மாதிரிகளும் தோட்டக்கலைத்துறை மூலம் 135 மண் மாதிரிகளும் பெறப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு மண் வள அட்டை மூலம் விவசாயிகளுக்கு ஆய்வு முடிவுகள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.