திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

வீட்டுக்கு ஒரு பொறியாளரை உருவாக்குவேன்: திமுக வேட்பாளர்

காரியாபட்டி பகுதியில் வீட்டுக்கு ஒரு பொறியாளரை உருவாக்குவேன் என்று ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் முகம்மது ஜலீல் கூறினார்.

News image
Updated On :5 ஜனவரி 2024, 4:49 am

கல்யாணி வெங்கடராமன்

காரியாபட்டி பகுதியில் வீட்டுக்கு ஒரு பொறியாளரை உருவாக்குவேன் என்று ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் முகம்மது ஜலீல் கூறினார்.

 காரியாபட்டியில் திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு விருதுநகர் மாவட்ட திமுக செயலாளர் சாத்தூர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். சட்டப்பேரவை உறுப்பினர் தங்கம்தென்னரசு வரவேற்றார். முன்னாள் மத்திய அமைச்சர்கள் வேங்கடபதி, ரகுபதி, தங்கவேலன் எம்.எல்.ஏ. மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பேசினர். கூட்டத்தில் ராமநாதபுரம் மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் முகம்மது ஜலீல் பேசியதாவது:

  மதுரையிலிருந்து காரியாபட்டி வழியாக தூத்துக்குடி செல்லும் நான்கு வழிச்சாலையை எட்டு வழிச் சாலையாக மாற்ற நடவடிக்கை எடுப்பேன். மதுரையிலிருந்து காரியாபட்டி, அருப்புக்கோட்டை வழியாக தூத்துக்குடிக்கு புதிய ரயில்பாதை அமைத்து ரயில் போக்குவரத்துக்கு நடவடிக்கை எடுப்பேன். பல ஆண்டுகளுக்கு முன்பே காரியாபட்டி பகுதியில் கல்லூரிகளை ஏற்படுத்தியுள்ளேன். இப்பகுதியில் வீட்டிற்கு ஒரு பொறியாளரை உருவாக்குவேன். இப்பகுதி பொதுமக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் மருத்துவக் கல்லூரி அமைக்க பாடுபடுவேன் என்றார்.

  கூட்டத்துக்கான ஏற்பாடுகளை காரியாபட்டி ஒன்றிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.