லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சாலையை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

தினமும் 200-க்கும் மேற்பட்ட மணல் லாரிகள் வந்து செல்வதால் ரோடு சேதமடைந்து போக்குவரத்துக்கு பயனற்றதாக உள்ளதால், பணிக்குறிப்பு கிராமத்தினர் மறியலில் ஈடுபட்டனர்.

Updated On :27 ஜூன் 2014, 6:37 pm

தினமும் 200-க்கும் மேற்பட்ட மணல் லாரிகள் வந்து செல்வதால் ரோடு சேதமடைந்து போக்குவரத்துக்கு பயனற்றதாக உள்ளதால், பணிக்குறிப்பு கிராமத்தினர் மறியலில் ஈடுபட்டனர்.

  காரியாபட்டி பி. புதுப்பட்டியில் அரசு மணல் குவாரி இயங்கி வந்தது. குண்டாற்றில் இருந்த மணல் முற்றிலும் அள்ளப்பட்டதையடுத்து, அங்கு இரண்டாம் நிலை விற்பனை நிலையம் செயல்பட்டு வருகிறது. பணிக்குறிப்பு, கல்லாம் பிரம்பு, முருகையாபுரம் ஆற்றுப் பகுதியையொட்டி தனியாருக்கு சொந்தமான பட்டா நிலத்தில் உள்ள மணல் காடுகளை குறைந்த விலைக்கு வாங்கி, அங்கு தினமும் 200-க்கும் மேற்பட்ட லாரிகளில் மணலை எடுத்து விற்பனை நிலையத்தில் குவிக்கின்றனர்.

 10 நிமிடத்துக்கு ஒரு லாரி வந்து செல்வதால் ரோடு சேதமடைந்து, அப்பகுதி ஊர்களுக்கு இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் பள்ளி மாணவர்கள் சைக்கிளில் செல்ல முடியவில்லை. தினமும் இருமுறை வந்து சென்ற அரசு பேருந்தும் வரவில்லை. அதன் ஓட்டுநர்கள் சாலையை காரணம் காட்டி வரத் தயங்குகிறார்கள்.

  இந்த நிலையில் அங்கு அதிவேகமாக வந்த லாரிகளை தடுத்து, வியாழக்கிழமை பணிக்குறிப்பு கிராமத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மணல் லாரிகளால் ரோடு குண்டும் குழியுமாகி உள்ளது.

  சாலையை முறையாக சீரமைத்துத் தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், ஊராட்சி மன்றத் தலைவர் முருகனிடம் கோரிக்கை விடுத்தனர். பின்னர் அவர் கூறியதன் பேரில் பொதுமக்கள் மறியலை கை விட்டு கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.