விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறில் உள்ள திமுக. முன்னாள் அமைச்சர் தங்கபாண்டியன் நினைவு மண்டபத்தை சேதப்படுத்திய 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
திமுக.வை சேர்ந்தவர் முன்னாள் அமைச்சர் தங்கபாண்டியன். திருச்சுழி எம்.எல்.ஏ, தங்கம் தென்னரசுவின் தந்தையான இவரது நினைவு மண்டபம் காரியாபட்டி அருகே மல்லாங்கிணறில் உள்ளது. இங்கு புதன்கிழமை மாலை வந்த 3 பேர் புகைப்படம் எடுக்கப் போவதாகக் கூறி நினைவு மண்டபத்துக்குள் நுழைய முயன்றனர். அவர்களை பார்த்து சந்தேகமடைந்த காவலாளி சங்கிலி, அனுமதிக்க முடியாது எனக்கூறி தடுத்தார். காவலாளியுடன் தகராறு செய்த அவர்கள், அவரை கீழே தள்ளி விட்டு மண்டபத்துக்குள் நுழைந்தனர். அங்கிருந்த தங்கபாண்டியனின் புகைப்படத்தின் மீது கற்களை வீசி தாக்கி உடைத்தனர். மேலும், சமாதியையும் சேதப்படுத்தி விட்டு ஓடி விட்டனர். காவலாளி கொடுத்த புகாரின் பேரில் மல்லாங்கிணறு போலீஸார் காரியாபட்டி அருகேயுள்ள முடியனூரைச் சேர்ந்த ரகுநாதன், குமார், அலங்காநல்லூரைச் சேர்ந்த பெருமாள் ஆகியோரை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஆப்பிள் நிறுவனத் தலைவர் டிம் குக் பதவி விலகுகிறார்!

வாக்களிக்க சொந்த ஊர் செல்வோர் கவனிக்க... சிறப்பு ரயில் இயக்கம்!

இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம்!
திமுக அரசின் சட்டம் ஒழுங்கு தோல்விக்கு முழு சாட்சி: சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு அண்ணாமலை கண்டனம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

