லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

திம்மாபுரத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சட்டப்பணிகள் குழுவின் சார்பில் திம்மாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

Updated On :22 ஜூன் 2014, 6:40 pm

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சட்டப்பணிகள் குழுவின் சார்பில் திம்மாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

முகாமிற்கு சார்பு நீதிபதி ஜான் சந்தோஷம் தலைமை வகித்தார். முகாமில், பிறப்பு இறப்பு சான்றிதழ் பெறுவது, ஜீவனாம்சம் கோருதல், விவாகரத்து, சொத்து பிரச்னை, பட்டா கோருதல், முதியோர் உதவித் தொகை ஆகியவை சம்பந்தமாகவும், எளிதாக நீதி கிடைக்கக்கூடிய வழிமுறைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

சார்பு நீதிபதி ஜான் சந்தோஷம் கூறுகையில், ஏழை எளிய மக்களுக்கு சட்ட உதவி கிடைப்பது குறித்தும், மோட்டார் வாகன விபத்து உரிமையியல் வழக்கு பேச்சு வார்த்தைகள் மூலம் தீர்வு காண்பது குறித்தும் பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.