லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

பழுதடைந்த சாலைகள் சீரமைப்பு

தினமணி செய்தி எதிரொலியாக மீனாட்சிபுரம் - ஏ.முக்குளம் சாலை சீரமைக்கப்பட்டது.

Updated On :5 ஜூலை 2014, 6:44 pm

தினமணி செய்தி எதிரொலியாக மீனாட்சிபுரம் - ஏ.முக்குளம் சாலை சீரமைக்கப்பட்டது.

காரியாபட்டி அருகே உள்ள மீனாட்சிபுரம் முதல் ஏ.முக்குளம் செல்லும் 9 கி.மீ. சாலை கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பாரத் நிர்மான திட்டத்தின் மூலம் ரூ.2 கோடியே 75 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டது. 3 மாதங்களிலேயே சாலையின் ஓரங்களில் பழுது ஏற்பட்டது. சாலை போட்ட சிறிது காலங்களிலேயே பழுதடைந்தால் முஷ்டக்குறிச்சி, ஆலங்குளம், சீகனேந்தல் பகுதி மக்கள் சாலையை பழுது நீக்கம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். இதுகுறித்து தினமணி நாளிதழில் விரிவாக செய்தி வெளியானது. தினமணி செய்தியின் எதிரொலியாக மீனாட்சிபுரம் முதல் ஏ.முக்குளம் வரை பழுதடைந்த சாலைகளை நெடுஞ்சாலைத்துறையினர் சீரமைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.