காரியாபட்டியில் பஸ் டெப்போ: மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நிரந்தர அரசு பஸ் டெப்போ அமைக்கப்படுமென முதல்வர் ஜெயலலிதா கடந்த சட்டப்பேரவை கூட்டதொடரில் அறிவிப்பு வெளியிட்டார். ஆனால்,


விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நிரந்தர அரசு பஸ் டெப்போ அமைக்கப்படுமென முதல்வர் ஜெயலலிதா கடந்த சட்டப்பேரவை கூட்டதொடரில் அறிவிப்பு வெளியிட்டார். ஆனால், அதற்கான பணிகள் மிக மெதுவாக நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதில், உடனடி நடவடிக்கை எடுக்க விருதுநகர் ஆட்சியர் டி.என். ஹரிஹரன் உத்தரவிட்டார். அதன்படி டி.ஆர்.ஓ. முனுசாமி, பிச்சம்பட்டி, ஜெ.ஜெ. காலனி அருகில் உள்ள இடங்களை ஆய்வு செய்தார். மேலும், கடமங்குளம், குரண்டியிலும் ஆய்வு மேற்கொண்டார். இப்பணியினை விரைந்து முடிக்க, அதிகாரிகளை அவர் வலியுறுத்தினார். அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ., உதயகுமார், காரியாபட்டி வட்டாட்சியர் முகமது ரபீக்கான் ஆகியோர் உடனிருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...