தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

காரியாபட்டியில் நிழற்குடை அமைக்க கோரிக்கை

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அரசு மருத்துவமனை அருகே பயணிகள் நிழற்குடை அமைக்க வலியுறுத்தி, விருதுநகர் ஆட்சியர் ஹரிஹரனிடம், எஸ்.பி.எம்., டிரஸ்ட், சார்பாக மனு அளிக்கப்பட்டது.

Updated On :26 அக்டோபர் 2013, 6:53 pm

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அரசு மருத்துவமனை அருகே பயணிகள் நிழற்குடை அமைக்க வலியுறுத்தி, விருதுநகர் ஆட்சியர் ஹரிஹரனிடம், எஸ்.பி.எம்., டிரஸ்ட், சார்பாக மனு அளிக்கப்பட்டது.

 காரியாபட்டி அரசு மருத்துவமனையில் குடும்ப நலம், பொது மருத்துவம், அறுவை சிகிச்சை வசதிகள் இருப்பதால், தினமும் 600 முதல் 800 பேர் வரை வெளிநோயாளிகள் வந்து செல்கின்றனர். கர்ப்பிணிகள், கைக்குழந்தைகளுடன் வரும் பெண்கள், முதியோர், சிகிச்சை பெற்றபின் பஸ்சுக்காக ரோட்டோரம் வெயிலிலும், மழையிலும் காத்திருக்கின்றனர். நோயாளிகள் ஒதுங்க இடமில்லாமல் தரையில் உட்கார வேண்டிய அவலநிலை உள்ளதால், பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகின்றனர். மேலும், மருத்துவமனையில் இருந்து பஸ் ஸ்டாண்ட்டுக்கு ஒன்றரை கி.மீ., தூரம் நடந்து செல்லவேண்டும். இதனாலும் நோயாளிகள் அவதிப்படுகின்றனர். இவர்களது நலன் கருதி அரசு மருத்துவமனை அருகே பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும் என, எஸ்.பி.எம். டிரஸ்ட் நிறுவனர் அழகர்சாமி, விருதுநகர் ஆட்சியர் ஹரிஹரனிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.