விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், ஆசிரியைகள் பற்றாக்குறையால், மாணவிகள் சிரமப்படுகின்றனர். காரியாபட்டியில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 1100-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். பிளஸ்-2-ல் மட்டும் 550 பேர் படித்து வருகின்றனர். முதுகலை தமிழ், ஆங்கிலம் பாடங்களுக்கு, 3 ஆசிரியைகள் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஒரு ஆசிரியை பாடம் நடத்தி வருகிறார்.
முதுகலை விலங்கியியல், வேதியியல், வணிகவியல், கம்ப்யூட்டர் ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளன. இந்த பாடப்பிரவுகளுக்கு, இருக்கிற ஆசிரியைகளை கொண்டு பாடம் நடத்தி வருகின்றனர். ஆசிரியைகளுக்கு பணிச்சுமை அதிகரிப்பதால், முறையாக பாடம் நடத்த முடிய வில்லை. பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகி கூறியதாவது: காலிப் பணியிடங்களை நிரப்ப, பலமுறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் கோரிக்கை மனு கொடுத்தும், இதுவரை நிரப்பப்படவில்லை. ஆசிரியைகள் பற்றாக்குறையால், மாணவிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். உடனடியாக ஆசிரியைகளை தமிழக அரசு நியமிக்க வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குடும்பத்துடன் வாக்களித்த நடிகை ரம்யா பாண்டியன்!
தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு! மாவட்டவாரியாக விவரம்...

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 78.77% வாக்குப்பதிவு- நேரலை

மேற்குவங்க பாஜக எம்எல்ஏ கார் மீது கற்கள் வீசித் தாக்குதல்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

