தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

பள்ளியில் அறிவியல் கண்காட்சி

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகேயுள்ள வல்லப்பன்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On :11 நவம்பர் 2013, 6:57 pm

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகேயுள்ள வல்லப்பன்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

   நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமையாசிரியர் நாகராஜன் தலைமை தாங்கினார். கிராம கல்விக் குழுத் தலைவர் தினகரன் முன்னிலை வகித்தார். கண்காட்சியில் மாணவ, மாணவியரின் அறிவியல் சாதனங்கள், செயல்விளக்கப் படைப்புகள் இடம் பெற்றன. வல்லப்பன்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி, வெற்றிலை முருகன்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி மாணவர்கள், கிராம பொதுமக்கள் அறிவியல் கண்காட்சியை பார்வையிட்டனர்.

 அறிவியல் செயல் விளக்க படைப்புகள் பற்றிய கருத்துகளை அறிவியல் ஆசிரியர் வேலுமணி விளக்கினார். கண்காட்சியை பார்வையிட்ட அனைவருக்கும் பள்ளியின் அறிவியல் ஆசிரியர் ஆறுமுகச்சாமி இனிப்பு வழங்கினார். கண்காட்சி முடிவில் அறிவியல் செயல்விளக்க படைப்புகளில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு தலைமையாசிரியர் நாகராஜன் பரிசுகளை வழங்கினார்.

  அறிவியல் கண்காட்சிக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் வேளாங்கண்ணி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.