லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

திருச்சுழி, நரிக்குடியில் உழவர் பெருவிழா

திருச்சுழி, எம்.ரெட்டியாபட்டி, குல்லம்பட்டி, சித்தலைக்குண்டு கிராமங்களில், உழவர் பெருவிழா நடைபெற்றது.

Updated On :20 மே 2013, 6:58 pm

திருச்சுழி, எம்.ரெட்டியாபட்டி, குல்லம்பட்டி, சித்தலைக்குண்டு கிராமங்களில், உழவர் பெருவிழா நடைபெற்றது.

   விழாவில் ஊராட்சித் தலைவர்கள் உத்திரம், ராஜூ தலைமை வகித்தனர். ரெட்டியபட்டி வேளாண் உதவி இயக்குனர் நாச்சியாரம்மாள், தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் ஜெயலட்சுமி, தொழில்நுட்ப மேலாளர் பிரேமா முன்னிலை வகித்தனர்.

   வேளாண் உற்பத்தி பொருள்களை அதிகரிக்கவும், புதிய தொழில் நுட்பங்கள் மற்றும் அரசின் திட்ட பணிகள் குறித்து விளக்கப்பட்டன. தொழில்நுட்ப கருத்து காட்சி நடந்தது.

   பார்த்தீனியம் செடிகளால் உண்டாகும் நோய்கள், எலி ஒழிப்பு, மண் மாதிரி சேகரம், விதை நேர்த்தி, மண்புழு உரம் தயாரித்தல், செயல் விளக்கம் காண்பிக்கப்பட்டன.

   விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த கையேடு, இடுபொருள்கள் விநியோகம் செய்யப்பட்டன. கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடந்தன. வேளாண் அலுவலர் சந்திரசேகரன், உதவி வேளாண் அலுவலர் மோகன்காந்தி, பொறியியல் துறை கோபிநாத் ஆகியோர் பேசினர். ஏற்பாடுகளை வேளாண்மை அலுவலர்கள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.