லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சிறுதானிய மேம்பாடு: விவசாயிகளுக்கு பயிற்சி

தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின்கீழ் தீவிர சிறுதானிய மேம்பாடு மூலம் ஊட்டச்சத்து பாதுகாப்பு குறித்து விவசாயிகளுக்கான  பயிற்சி முகாம் கோவிலாங்குளம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நடைபெற்றது.

Updated On :17 மார்ச் 2013, 7:21 pm

தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின்கீழ் தீவிர சிறுதானிய மேம்பாடு மூலம் ஊட்டச்சத்து பாதுகாப்பு குறித்து விவசாயிகளுக்கான  பயிற்சி முகாம் கோவிலாங்குளம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நடைபெற்றது.

      இப்பயிற்சியில் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 50 விவசாயிகள் கலந்து கொண்டனர். முகாமில் சிறு, குறு தானியங்கள் சாகுபடி தொழில் நுட்பங்களும், சிறுதானியங்களின் உயர் விளைச்சல் ரகங்கள் பற்றியும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. மேலும் சிறுதானியங்களில் மதிப்பூட்டப்பட்ட பொருள்களையும் அவற்றின் ஊட்டச்சத்து முக்கியத்துவம் பற்றியும் விரிவாக கூறப்பட்டது.   சிறுதானியங்கள் அடங்கிய கண்காட்சியும் முகாமில் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. இப்பயிற்சியுடன் விவசாயிகள் பட்டறிவு பயணமாக பையூர் மண்டல ஆராய்ச்சி நிலையம் மற்றும் கோவை வேளாண்மை பல்கலைக்கழகம் ஆகிய இடங்களுக்கு  அழைத்துச் செல்லப்பட்டு சிறுதானியங்கள் சாகுபடி மற்றும் மதிப்பூட்டல் பற்றி  வேளாண்மை பல்கலைக்கழக பேராசிரியர்களால் எடுத்துரைக்கப்பட்டது.

    இப்பயிற்சியில் அருப்புக்கோட்டை மண்டல ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் ராஜாராம், வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் பால்பாண்டி மற்றும் இதர உதவிப் பேராசிரியர்கள் கலந்து கொண்டு விவசாயிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.