காரியாபட்டி அருகேயுள்ள ஏ.முக்குளம் சாலை படுமோசமாக இருப்பதால், வாகனங்கள் சென்று வருவதில் சிரமம் ஏற்படுகிறது. அதனை இருவழிச் சாலையாக மாற்ற, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
காரியாபட்டியிலிருந்து ஏ.முக்குளம் 28 கி.மீ., தூரத்தில் உள்ளது. இந்த வழித்தடத்தில் மீனாட்சிபுரம், முஷ்டக்குறிச்சி, தேசியனேந்தல், சீகனேந்தல், ஆலங்குளம், பனைக்குடி, புல்வாய்க்கரை என பல ஊர்கள் உள்ளன. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், நாலூர் வழியாக மானாமதுரை உள்ளிட்ட ஊர்களுக்கு, எளிதில் செல்லும் வழியாக இது உள்ளது.
இப்பகுதியில் மூலிகை பண்ணை இருப்பதால், அடிக்கடி வாகனப் போக்குவரத்தும் உள்ளது. அரசு, தனியார் பஸ்களும் சென்று வருகின்றன. இந்த ரோடு போடப்பட்டு 8 ஆண்டுகள் ஆகின்றன. இதனால், தற்போது ரோடு குண்டும், குழியுமாக உள்ளது. பல்வேறு கோரிக்கைக்கு பின், ரோட்டில் ஒட்டு போடும் பணிகள் நடந்தன. இதுவும் முறையாக போடாமல், மேலும் பள்ளங்கள் உருவாகி, படுமோசமாக காட்சியளிக்கிறது. வாகனங்கள் சென்று வருவதிலும் சிரமம் ஏற்படுகிறது.
விவசாய நேரத்தில் விதைகள், உரங்கள் கொண்டு செலவதில் சிக்கல் நீடிக்கிறது. பெருகி வரும் வாகனங்களுக்கு ஏற்றவாறு, ரோட்டை சீரமைத்து, இருவழிச்சாலையாக மாற்ற வேண்டும் என, அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்

‘சிஎம் சார், 5 வருசத்துல என்ன பண்ணிருக்கீங்க?’ என கேட்டால்... ஸ்டாலின் விளக்கம்!
தவெக தலைவர் விஜய் இன்று எங்கு பிரசாரம் செய்கிறார்?

தமிழ்நாட்டை வஞ்சிக்க நினைப்பவர்களுக்கு நான் டேஞ்சர்! - முதல்வர் ஸ்டாலின்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

