லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

அருப்புக்கோட்டை அருகே வீணாகும் தாமிரவருணி குடிநீர்

அருப்புக்கோட்டைக்கு குடிநீர் வரும் தாமிரவருணி கூட்டுக் குடிநீர் திட்டக்  குழாய்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு போதுமான குடிநீர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Updated On :24 ஜூன் 2013, 7:10 pm

அருப்புக்கோட்டைக்கு குடிநீர் வரும் தாமிரவருணி கூட்டுக் குடிநீர் திட்டக்  குழாய்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு போதுமான குடிநீர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

   அருப்புக்கோட்டை நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. திருப்புவனத்துக்கு வைகை ஆற்றிலிருந்தும், தாமிரவருணி குடிநீர் திட்டம் மூலமும் 3 தினங்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

   தற்போது மின்வெட்டு பிரச்னை காரணமாக போதிய குடிநீர் பம்பிங் செய்ய முடியவில்லை.

   திருப்புவனம் வைகை ஆறு வறண்டு விட்டதால் நகருக்கு வரவேண்டிய குடிநீர் குறைவாக வருகிறது. இதனால் தாமிரவருணி குடிநீர் தான் நகர் முழுவதும் சப்ளை செய்யப்படுகிறது.

   இந்நிலையில் தாமிரவருணி திட்டம் மூலம் குடிநீர் வடிகால் வாரியம் நாளொன்றுக்கு 50 லட்சம் லிட்டர் குடிநீரை நகருக்குத் தரவேண்டும். ஆனால் 20 லட்சம் லிட்டர் தண்ணீர் தான் கொடுக்கின்றனர். இதனால் நகரில் 6 நாள்களுக்கு ஓரு முறை குடிநீர் விநியோகம் சுழற்சி முறையில் வழங்கப்படுகிறது.

   தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு பகுதிகளில் இருந்து குழாய்கள் மூலம் அருப்புக்கோட்டைக்குத் தண்ணீர் வருகிறது. வரும் பாதையில் உள்ள குடிநீர் குழாய்கள் ஆங்காங்கே உடைந்து தண்ணீர் வீணாகி வருகிறது.

    இதை முறையாக குடிநீர் வடிகால் வாரியத்தினர் பராமரிப்பது இல்லை. இதனால் தான் நகரில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது.

   எனவே குடிநீர் வடிகால் வாரியத்தினர் குழாய் உடைப்புகளை உடனுக்குடன் சரி செய்து தண்ணீரைக் கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.