விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே பொதுமக்களின் கடும் எதிர்ப்பால் சனிக்கிழமை அரசு மணல் குவாரி மூடப்பட்டது.
திருச்சுழி அருகே உள்ள காரைக்குளம் கிராமத்தை சுற்றி தாமரைக்குளம், எசலிமடை, செந்நிலைக்குடி, இடையங்குளம் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. இப்பகுதியில் செல்லும் குண்டாற்றின் நீரை வைத்தே இப்பகுதி விவசாயிகள் பெருமளவில் விவசாயம் செய்து பயனடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் காரைக்குளத்தில் மணல் குவாரி அமைத்து சனிக்கிழமை முதல் லாரியில் மணல் அள்ளும் பணி துவங்கியது. இதுபற்றி தகவல் அறிந்த இப்பகுதி விவசாயிகள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் மணல் குவாரியை முற்றுகையிட்டனர். திருச்சுழி காவல் ஆய்வாளர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டனர்.
காரியாபட்டி வட்டாட்சியர் முகம்மது ரவிக்கான் சம்பவ இடத்துக்கு வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததால் காலையில் திறக்கப்பட்ட மணல் குவாரி உடனடியாக மூடப்பட்டது.
இதுபற்றி திங்கள்கிழமை (ஜூன் 17) மீண்டும் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என வட்டாட்சியர் கூறினார். மணல் குவாரி நடத்தப்பட்டால் எங்களது குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டையினை வட்டாட்சியரிடம் ஒப்படைத்து விட்டு, கிராமத்தை விட்டு வெளியேறுவோம் என கிராம மக்கள் கூறினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திமுக 20 இடங்களில் வென்றாலே ஆச்சரியம்தான்: இபிஎஸ் பேச்சு

கச்சா எண்ணெய் விலை உயர்வால் பெயிண்ட் விலை அதிகரிப்பு!

வைத்தீஸ்வரன் கோயிலில் நகரத்தார் குலதெய்வ வழிபாடு: திரளானோர் பங்கேற்பு!
நானும் திராவிடன்தான்! சென்னையில் சந்திரபாபு நாயுடு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

