லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

கழிப்பறையினை திறக்க பொதுமக்கள் கோரிக்கை

விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணர் மெயின் பஜாரில் 3 மாத காலமாக மூடப்பட்டுள்ள கட்டண கழிப்பறையினைத் திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

Updated On :2 ஜூன் 2013, 6:39 pm

விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணர் மெயின் பஜாரில் 3 மாத காலமாக மூடப்பட்டுள்ள கட்டண கழிப்பறையினைத் திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

   இதுபற்றி பொதுமக்கள் சார்பில் தென்னிந்திய நுகர்வோர் பாதுகாப்புக் கழக நகர அமைப்பாளர் பாண்டியன் மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

   மல்லாங்கிணரில் சுமார் 5 ஆயிரம் வீடுகள் உள்ளன. இந்த  வீடுகள் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டவை. அவற்றில் கழிப்பறை வசதி இல்லை. புதிதாக கழிப்பறை அமைக்க இடவசதியும் இல்லை. இப்பகுதி மக்களின் வசதிக்காக மெயின் பஜாரில் நவீன் கழிப்பறை அமைக்கப்பட்டு செயல்பட்டு வந்தது.

   இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திடீரென கழிப்பறை மூடப்பட்டது. கழிப்பறை மூடப்பட்டதால் இப்பகுதி பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதுபற்றி பேரூராட்சி நிர்வாகத்திடம் மனு கொடுத்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

   உடனடியாக கட்டண கழிப்பறையினைத் திறக்க பேரூராட்சி நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இது பற்றி பேரூராட்சி நிர்வாகத்திடம் கேட்ட போது பதில் கூற மறுத்து விட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.