லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

மல்லாங்கிணறில் காமராஜர் பிறந்தநாள் விழா

விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணறில் பெருந்தலைவர் காமராஜரின் 111-ஆவது பிறந்தநாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On :16 ஜூலை 2013, 6:48 pm

விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணறில் பெருந்தலைவர் காமராஜரின் 111-ஆவது பிறந்தநாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு திருச்சுழி எம்.எல்.ஏ., தங்கம் தென்னரசு, நாடார் மகாஜன சங்க பொதுச் செயலர் கரிக்கோல்ராஜ் தலைமை தாங்கினர்.

 ஜெயா ரோடுவேஸ் ஜெயக்குமார், தொழிலதிபர் வாசு, மல்லாங்கிணர் பேரூராட்சித் தலைவர் நாகையா, முன்னாள் துணைத் தலைவர் போஸ், நகரச் செயலர் முருகேசன், பள்ளி செயலர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

   பிளஸ் 2 தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர் ராமநாதனுக்கு தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ., தங்கமோதிரம் பரிசாக வழங்கி பேசியதாவது:

     காமராஜர் பிறந்ததால் தான் விருதுநகருக்கே பெருமை, நான் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக இருந்தபோது தான் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளை பள்ளிகளில் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட வேண்டும் என சட்டம் இயற்றப்பட்டது என்றார்.

   10-ஆம் வகுப்பில் முதல் மாணவனாக தேர்ச்சி பெற்ற சுப்பிரமணிக்கு கரிக்கோல்ராஜ் தங்கமோதிரம் வழங்கி பேசினார்.

   நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர் தேவசகாயம், ஒன்றிய பிரதிநிதி சந்திரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் கண்ணன், சிவசக்தி, மகளிரணி செயலர் ராணி, மீனவரணி செயலர் மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.