திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

இன்ஸ்பையர் அறிவியல் பயிற்சி முகாமிற்கு 11-வது வகுப்பு மாணவ, மாணவிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழிற்நுட்பத் துறையின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் இன்ஸ்பையர் என்னும் அறிவியல் பயிற்சி முகாம் விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரியில் ஆக-16ம் தேதி

News image
Updated On :3 ஜனவரி 2024, 12:39 pm

எஸ். பாண்டியன்

விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரியின் சார்பில் நடைபெற இருக்கிற இன்ஸ்பையர் அறிவியல் பயிற்சி முகாமிற்கு 11-வது வகுப்பு மாணவ, மாணவிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இது குறித்து செந்திக்குமார நாடார் கல்லூரியின் முதல்வர் பி.சுந்தரபாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழிற்நுட்பத் துறையின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் இன்ஸ்பையர் என்னும் அறிவியல் பயிற்சி முகாம் விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரியில் ஆக-16ம் தேதி முதல் 20-ம் தேதி வரையில்  நடைபெற இருக்கிறது.

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழிற்நுட்ப துறையின் சார்பில் ஆண்டுதோறும் மாணவ, மாணவிகளிடையே அறிவியல் ஆர்வத்தையும், ஆராய்ச்சி தன்மையை மேம்படுத்தும் வகையில் இன்ஸ்பையர் என்ற பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதில், பங்கேற்பதற்கு நிகழாண்டில் பிளஸ்1 படித்து வரும் மாணவ, மாணவிகளாக இருக்க வேண்டும். அதோடு, 10-வது தேர்வில் 94 சதவீதம் மதிப்பெண்களும், சி.பி.எஸ்.சி 10-வது 95 மதிப்பெண்கள் பெற்று ஏ கிரேடு பெற்றிருக்கவும் வேண்டும்.

மேலும், இதுபோன்ற முகாம்களில் பங்கு பெற்றும் இருப்பது அவசியம் ஆகும். இந்த முகாமில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவிகள் தற்போது பயின்று வரும் பள்ளியின் தலைமையாசிரியர்களிடம் அனுமதி பெற்று முதல்வர், விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரி, விருதுநகர் என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும். மேலும், இந்த விண்ணப்பங்களை www.vhnsc.edu.in என்ற இணைய தள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், இது தொடர்பாக பயிற்சி ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் டி.இராமனிடம் தொலைபேசி எண்-9245165958 தொடர்பு கொண்டு தகவல்களை பெறலாம். அதோடு,  பங்கேற்கிறவர்களுக்கு மத்திய அரசு அறிவியல் தொழில் நுட்ப துறையின் வல்லுநர்கள், விஞ்ஞானிகள் ஆகியோர் பயிற்சி அளிக்க இருப்பதாகவும் முதல்வர் சுந்தரபாண்டியன் தெரிவித்துள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.