லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

புதிய கட்டடத்தில் சந்தைநடைபெற பொதுமக்கள் கோரிக்கை

விருதுநகர் மாவட்டம் கட்டனூரில் ஒவ்வொரு வாரமும் சந்தை நடைபெறும். இங்கு நாலூர், அழகாபுரி, ஏ. முக்குளம், கருவக்குடி உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து மக்கள்கள் வருகின்

Updated On :4 ஆகஸ்ட் 2013, 7:29 pm

விருதுநகர் மாவட்டம் கட்டனூரில் ஒவ்வொரு வாரமும் சந்தை நடைபெறும். இங்கு நாலூர், அழகாபுரி, ஏ. முக்குளம், கருவக்குடி உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து மக்கள்கள் வருகின்றனர். இதற்காக கட்டனுரில் 2006-ல் கட்டடம் கட்டப்பட்டது. இந்த கட்டடத்தில் 6 ஆண்டுகளாக சந்தை நடைபெறவில்லை. அதற்கு பதிலாக ஊராட்சி துவக்கப்பள்ளி அருகே இடநெருக்கடியில் சந்தை நடைபெற்று வந்தது.  அதன் பின்னர் போலீஸ் நிலையம் எதிரே உள்ள சந்தை கட்டடத்தில் நடந்தது. இப்போது மீண்டும் ஒரு மாதமாக, பழைய இடத்திலேயே, இட நெருக்கடியில் சந்தை நடைபெறுகிறது. தற்சமயம் ஆடு, மாடு போன்ற கால்நடைகளின் இருப்பிடமாக சந்தை உள்ளது. எனவே மீண்டும் சந்தைக்காக  கட்டப்பட்ட கட்டடத்திலேயே சந்தை செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.