விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணர் அருகேயுள்ள கீழஅழகியநல்லூரில் உழவர் பெருவிழா நடைபெற்றது.
மாவட்ட துணை இயக்குனர்கள் கனகராஜ், விவேகானந்தன் தலைமையில் ஊராட்சி மன்றத்தலைவர் பிச்சையம்மாள் முன்னிலையில் உழவர் பெருவிழா துவங்கியது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக காரியாபட்டி ஒன்றியக்குழு தலைவர் முத்துலெட்சுமி கலந்து கொண்டு உழவர் அட்டைகளை விவசாயிகளுக்கு வழங்கி பேசியதாவது: தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவுபடி உழவர் பெருவிழா துவங்கப்பட்டு காரியாபட்டி ஒன்றியத்தில் உள்ள 65 வருவாய் கிராமங்களில் தொடர்ந்து நடைபெறும்.
வேளாண்மைதுறை, தோட்டகலைத்துறை, கால்நடை பராமரிப்புதுறை உள்ளிட்ட 16 துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொழில்நுட்ப உத்திகள், அரசின் நலத்திட்டங்கள் குறித்து பேசி வருகின்றனர். விவசாயிகள் இலவசமாக மண் பரிசோதனை செய்வதுடன், விதைகள், மானிய விலையில் விவசாயப்பொருள்களையும் பெற்று கொள்ளலாம் என்றார். காரியாபட்டி வேளாண்மை உதவி இயக்குநர் சரஸ்வதி, ஒன்றிய விவசாய அணி செயலாளர் முத்துபாண்டி, மகளிரணி செயலாளர் இந்திராதேவி, முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர் பழநிச்சாமி, கிளை செயலாளர்கள், ஊராட்சி மன்றத்துணை தலைவர்கள் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்

‘சிஎம் சார், 5 வருசத்துல என்ன பண்ணிருக்கீங்க?’ என கேட்டால்... ஸ்டாலின் விளக்கம்!
தவெக தலைவர் விஜய் இன்று எங்கு பிரசாரம் செய்கிறார்?

தமிழ்நாட்டை வஞ்சிக்க நினைப்பவர்களுக்கு நான் டேஞ்சர்! - முதல்வர் ஸ்டாலின்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

