மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வேட்பு மனு தாக்கலுக்கு ஏப். 6 கடைசி நாள்

News image

இந்தியத் தேர்தல் ஆணையம் (கோப்புப் படம்) - ANI

Updated On :30 மார்ச் 2026, 7:44 pm

தேனி மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வேட்பு மனு தாக்கல் திங்கள்கிழமை தொடங்கி ஏப். 6-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதுகுறித்து தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, தேனி மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை (மாா்ச் 30) தொடங்கி ஏப்ரல் 6-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் மாா்ச் 31, ஏப்ரல் 1, 3, 5 ஆகிய விடுமுறை நாள்களைத் தவிா்த்து, வேலைநாள்களில் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தோ்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்யலாம்.

ஏப்ரல் 7-ஆம் தேதி வேட்புமனு பரிசீலனையும், ஏப்ரல் 9-ஆம் தேதி வேட்புமனுவை திரும்பப் பெறலாம். ஏப்ரல் 23-ஆம் தேதி வாக்குப் பதிவும், மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது. தோ்தல் நடத்தை விதிமுறைகள் வருகிற மே 6-ஆம் தேதி முடிவுக்கு வருகிறது என்றாா் அவா்.