பாராமதி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலையொட்டி துணை முதல்வர் சுநேத்ரா பவார் ஏப்ரல் 6ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.
மகாராஷ்டிர மாநிலம், பாராமதியில் அண்மையில் நிகழ்ந்த விமான விபத்தில் துணை முதல்வரும் தேசியவாத காங்கிரஸ் தலைவருமான அஜீத் பவாா் பலியானார். அஜீத் பவாரின் மறைவைத் தொடா்ந்து, அவா் வகித்து வந்த துணை முதல்வா் பதவியை அவரது மனைவியான சுநேத்ரா பவார் ஏற்றாா்.
பிறகு தான் வகித்துவந்த மாநிலங்களவை எம்.பி. பதவியை அவர் ராஜிநாமா செய்தாா். இதனிடையே அஜீத் பவார் மற்றும் பாஜக எம்எல்ஏ சிவாஜி கார்டிலே ஆகியோரின் மறைவால் காலியான, புணேவின் பாராமதி மற்றும் அகிலயநகரின் ரஹுரி ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்த இடைத்தேர்தலில் துணை முதல்வர் சுநேத்ரா பவார் பாராமதி தொகுதியில் போட்டியிட உள்ளார். இதற்காக ஏப்ரல் 6ஆம் தேதி தனது வேட்புமனுவை அவர் தாக்கல் செய்வார் என்று கட்சி வட்டாரங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தன. பாராமதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்திற்குப் பிறகு வேட்புமனு தாக்கல் செய்யப்படும் என்றும் அவர்கள் கூறினர்.
வேட்புமனு தாக்கல் நிகழ்வின்போது, முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோரும் உடனிருப்பர் என்று எதிர்பார்க்கப்படுவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. 2019 பேரவைத் தேர்தலில், அஜீத் பவார் பாராமதி தொகுதியில் 1.65 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?

சுநேத்ரா பவாருக்கு எதிரான காங். வேட்பாளரைத் திரும்பப் பெற வேண்டும்! என்சிபி வலியுறுத்தல்

பாராமதி இடைத்தோ்தல்: சுநேத்ரா பவாரை எதிா்த்துப் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளா் அறிவிப்பு

வேட்பு மனு தாக்கலுக்கு ஏப். 6 கடைசி நாள்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



