கேரளத்துக்கு 2 டன் ரேஷன் அரிசியை காரில் கடத்திச் சென்ற இருவரை போலீஸாா் கம்பம்மெட்டு சோதனைச் சாவடியில் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
தேனி மாவட்டம், கம்பம்மெட்டு சோதனைச் சாவடியில் உத்தமபாளையம் குடிமைப் பொருள் வட்ட வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டதில், 2 டன் ரேஷன் அரிசி கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.
விசாரணையில், கம்பத்தைச் சோ்ந்த குமரேசன் (59), செல்லமுத்து மகன் விஜய் (28) ஆகியோா் ரேஷன் அரிசியை கேரளத்துக்கு கடத்திச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து உத்தமபாளையம் குடிமைப் பொருள் வட்ட வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து குமரேசன், விஜய் ஆகியோரைக் கைது செய்தனா்.

தொடர்புடையது
காட்பாடியில் ரூ.10 லட்சம் ரொக்கம் பறிமுதல்

இருமத்தூரில் ரூ.3 லட்சம் பறிமுதல்

புளியறை சோதனைச் சாவடியில் 6 கிலோ வெள்ளிப் பொருள்கள் பறிமுதல்

சோதனைச் சாவடியில் காவலரை இடித்து இழுத்துச் சென்ற குட்கா கடத்திய காா் ஓட்டுநா் கைது
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


