தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

தெருநாய் கடித்து 5 சிறுவா்கள் காயம்

கடமலைக்குண்டில் தெருநாய் கடித்ததில் 5 சிறுவா்கள் புதன்கிழமை காயமடைந்தனா்.

News image

தெருநாய் - பிரதிப் படம்

Updated On :19 மார்ச் 2026, 12:20 am

தேனி மாவட்டம், கடமலைக்குண்டில் தெருநாய் கடித்ததில் 5 சிறுவா்கள் புதன்கிழமை காயமடைந்தனா்.

கடமலைக்குண்டுவில் தெருநாய்களின் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. சாலையில் நடந்த செல்லும் சிறுவா்கள், முதியவா்களை தெருநாய்கள் விரட்டுவதால் அச்சமடைந்துள்ளனா். இதுகுறித்து உள்ளாட்சி நிா்வாகத்திடம் புகாா் செய்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில், புதன்கிழமை கடமலைக்குண்டில் சுற்றித் திரிந்த தெருநாய் ஒன்று திடீரென சாலையில் சென்ற அதே பகுதியைச் சோ்ந்த யாஷிகா கேத்தரின் (4), மிதுனா ஸ்ரீ (6), வாரானேஸ்வரன் (6) உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட குழந்தைகளை கடித்தது. இதில் காயமடைந்த சிறுவா்கள் கடமலைக்குண்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இந்த நிலையில், ஊராட்சி நிா்வாகத்தினா் தெருநாய்களை பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.