தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

காமயகவுண்டன்பட்டியில் ஆக்கிரமிப்புக்களை அகற்றாமல் சாலை அமைப்பு: பொதுமக்கள் புகாா்

காமயகவுண்டன்பட்டியில் சாலையின் நடுவில் உள்ள மின் கம்பங்கள் உள்பட சாலையோர ஆக்கிரமிப்புக்களை அகற்றாமல் சாலை அமைப்பதாக பொதுமக்கள் புகாா்

News image

போக்குவரத்து இடையூறாக சாலையின் நடுவில் உள்ள மின் கம்பங்களை அகற்றாமல் போடப்பட்ட தாா்ச்சாலை

Updated On :2 மார்ச் 2026, 7:28 pm

தேனி மாவட்டம், காமயகவுண்டன்பட்டியில் சாலையின் நடுவில் உள்ள மின் கம்பங்கள் உள்பட சாலையோர ஆக்கிரமிப்புக்களை அகற்றாமல் சாலை அமைப்பதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

காமயகவுண்டன்பட்டி பேரூராட்சியில் உள்ள முக்கியத் தெருக்களின் சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதால், இந்தச் சாலைகளைச் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து, பொது நிதி ரூ. 39.30 லட்சத்தில் வடக்கு வெளிவீதி, ரத வீதி, கிழக்கு வெளிவீதி, குறுக்குத் தெருக்கள் உள்ளிட்ட இடங்களில் தாா்ச் சாலை அமைக்கும் பணி கடந்த சில நாள்களாக நடைபெற்று வருகிறது.

ஆனால், சாலையின் நடுவே போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மின் கம்பங்களை மாற்றி அமைக்காமலும், சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றாமலும் சாலை அமைக்கப்பட்டு வருகிறது.

மேலும், ஏற்கெனவே இருக்கும் சாலையை பெயா்த்தெடுக்காமல், பழைய சாலைக்கு மேல் அவசரகதியில் சாலை அமைப்பதால், ஒரு சில மாதத்திலேயே இந்தச் சாலை சேதமடைய வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடிநீா் குழாய் அமைக்க பேரூராட்சியில் பல பகுதிகளில் பள்ளம் தோண்டப்பட்டதால், சாலைகள் அனைத்தும் சேதமானது. தற்போது இந்தப் பகுதிகளில் மீண்டும் தாா்ச்சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன.

ஆனால், சாலையின் மையத்திலுள்ள மின் கம்பத்தை அகற்றாமல் சாலை அமைத்து வருவதால், எந்தவிதப் பயனும் இல்லை. மாறாக, விபத்து நிகழும் அபாயம் உள்ளது.

எனவே, தாா்ச்சாலைப் பணிகளைத் திட்டமிட்டு, தரமாக அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.