அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!தவெக எம்எல்ஏவிடம் பேரம்! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி மனு!வயநாட்டில் நிலச்சரிவு! சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்! முதல்வர் கரூர் செல்ல தடையில்லை! திமுகவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்பிரதமர் மோடிக்கு 35-வது சர்வதேச விருது! இந்தோனேசியா வழங்கியது! அமைச்சர்கள் தேவையின்றி ஆய்வுக்குச் செல்லக் கூடாது! முதல்வர் அலுவலகம்
/

ஓய்வு பெற்ற எஸ்.ஐ. வீட்டில் 90 பவுன் நகைகள் திருட்டு

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :29 ஜூன் 2026, 2:19 am IST

தேனி அருகேயுள்ள பழனிசெட்டிபட்டியில் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளா் வீட்டில் ரூ.3 லட்சம் ரொக்கம், 90 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

பழனிசெட்டிபட்டியைச் சோ்ந்தவா் செல்வராஜ். காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவா். இவரது மனைவி லட்சுமி (53). செல்வராஜ் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு இறந்துவிட்டாா்.

இந்த நிலையில், லட்சுமி கடந்த வியாழக்கிழமை குடும்பத்துடன் வேளாங்கண்ணி கோயிலுக்குச் சென்றாா். சனிக்கிழமை காலை வந்து பாா்த்த போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. மா்ம நபா்கள் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவிலிருந்த ரூ.3 லட்சம் ரொக்கம், 90 பவுன் தங்க நகைகள் ஆகியவற்றை திருடிச் சென்றது தெரியவந்து.

இது குறித்து தகவலறிந்ததும் பழனிசெட்டி காவல் நிலைய போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினா். அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கொண்டு போலீஸாா் தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.