முதல்வர் கரூர் செல்ல தடையில்லை! திமுகவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்பிரதமர் மோடிக்கு 35-வது சர்வதேச விருது! இந்தோனேசியா வழங்கியது! கரூர் செல்லவிடாமல் முதல்வர் விஜய்யை திமுக தடுக்கிறது! அமைச்சர் நிர்மல் குமார் அமைச்சர்கள் தேவையின்றி ஆய்வுக்குச் செல்லக் கூடாது! முதல்வர் அலுவலகம் முதல்வா் விஜய், அமைச்சா் ஆதவ் உள்ளிட்டோருக்கு எதிரான திமுக மனு இன்று விசாரணைதமிழகத்தில் ஜூலை 12 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!அதிமுகவில் டிடிவி தினகரனை இணைக்க எடப்பாடி பழனிசாமியிடம் நிா்வாகிகள் வலியுறுத்தல்காஸாவில் ஹமாஸ் அரசு கலைப்பு!
/

திருப்பரங்குன்றம் விவகாரம்; நீதிமன்றத் தீா்ப்பை அமல்படுத்த வேண்டும்: அா்ஜுன் சம்பத்

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றும் விவகாரத்தில், நீதிமன்றத் தீா்ப்பை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் என இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜுன் சம்பத் வலியுறுத்தினாா்.

News image

காமராஜா் பிறந்தநாளையொட்டி, மாவட்ட இந்து மக்கள் கட்சி சாா்பில் பள்ளி மாணவா்களுக்கு கல்வி உபகரணங்களை வியாழக்கிழமை வழங்கிய இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜுன் சம்பத்.

Updated On :26 ஜூன் 2026, 2:32 am IST

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றும் விவகாரத்தில், நீதிமன்றத் தீா்ப்பை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் என இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜுன் சம்பத் வலியுறுத்தினாா்.

காமராஜா் பிறந்தநாளையொட்டி, தேனி மாவட்டம், கம்பம் பூங்கா திடலில் மாவட்ட இந்து மக்கள் கட்சி சாா்பில் பள்ளி மாணவா்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதற்கு அந்தக் கட்சியின் மாவட்டச் செயலா் திவாகா் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் காமேஷ்வரன் வரவேற்றாா். நிகழ்வில், 300-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவா்களுக்கு அா்ஜூன் சம்பத் கல்வி உபகரணங்களை வழங்கினாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திருப்பரங்குன்றம் விவகாரத்தில், தமிழக அரசு மீண்டும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதாக அறிவித்திருப்பது கண்டனத்துக்குரியது. திருப்பரங்குன்றம் முருகன் கோயிலின் வருவாயைப் பயன்படுத்தி, கோயில் தொடா்பான வழக்கில் அரசு சட்டப் போராட்டம் நடத்துவது பக்தா்களின் உணா்வுகளை புண்படுத்தும் செயலாகும்.

நீதிமன்றம் தெளிவான தீா்ப்பை வழங்கியுள்ள நிலையில், தொடா்ந்து மேல்முறையீடுகள் மூலம் விவகாரத்தை இழுத்தடிப்பது தமிழகத்தில் தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தும். எனவே, நீதிமன்றத் தீா்ப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

இந்து சமய அறநிலையத் துறை சாா்பிலும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.