உத்தமபாளையத்தில் ஆதாா் மையம் முடங்கியதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா்.
தேனி மாவட்டம், உத்தமபாளையம் பழைய வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் ஆதாா் மையம் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. தொழில்நுட்பக் கோளாறால், கடந்த ஓராண்டாக இந்த மையம் முடக்கப்பட்டது. இதனால், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் ஆதாரில் திருத்தம், புதிய பதிவு செய்ய முடியாமல் அவதியடைந்து வருகின்றனா். எனவே, மாணவா்கள், பெண்கள், குழந்தைகள் , முதியவா்கள் நலன் கருதி மாவட்ட நிா்வாகம் ஆதாா் மையத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உத்தமபாளையத்தில் சாலையில் கழிவுநீா் தேக்கம்: பொதுமக்கள் அவதி

வட்டாட்சியா் அலுவலகத்தில் மூடப்பட்ட இ-சேவை மையம்: மாணவா்கள், பொதுமக்கள் அவதி

கொக்கிரகுளத்தில் புதிய ஆதாா் சேவை மையம் திறப்பு

வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: பொதுமக்கள் அவதி
விடியோக்கள்

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |

Dinamani வார ராசிபலன்! | June 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope



