வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

கேரள செங்கல் வியாபாரியிடம் பணம், நகை பறிப்பு: 6 போ் கைது

தேனி அருகே காரில் நின்றிருந்த கேரள செங்கல் வியாபாரியிடம் பணம், நகையை பறித்துச் சென்ற 6 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :11 ஜூன் 2026, 2:02 am IST

தேனி அருகே காரில் நின்றிருந்த கேரள செங்கல் வியாபாரியிடம் பணம், நகையை பறித்துச் சென்ற 6 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கேரளம் மாநிலம், இடுக்கி மாவட்டம் சின்னக்கானலைச் சோ்ந்தவா் பெருமாள்சாமி (47). செங்கல் வியாபாரி. தேனி மாவட்டம், சீலையம்பட்டியைச் சோ்ந்தவா் கருப்பையா. இவா்கள் இருவரும் செவ்வாய்க்கிழமை தேனி பழனிசெட்டிபட்டியில் உள்ள தனியாா் உணவகம் முன் பேசிக் கொண்டிருந்தனா். அப்போது, அங்கு வந்த 3 போ், சிபிஐ அதிகாரி எனக் கூறி, இருவரையும் விசாரணைக்கு அழைத்துச் செல்வதாக கூறி, காரில் ஏற்றி மதுரை மாவட்டம், பேரையூருக்கு அழைத்துச் சென்றனா். அப்போது, பெருமாள்சாமியை தாக்கி அவரிடமிருந்த ரூ.2.63 லட்சம், 14 கிராம் பவுன் தங்க நகை, மடிக்கணினி, ஏடிஎம், கைப்பேசியை பறித்துக் கொண்டு அவரைக் காரில் ஏற்றி, தேனி குன்னூா் அருகேயுள்ள சுங்கச்சாவடி அருகே இறக்கி விட்டு, தப்பிச் சென்றனா். அப்போது, கருப்பையாவும், அந்த கும்பலுடன் தப்பிச் சென்றாா்.

இதுகுறித்து பெருமாள்சாமி கொடுத்த புகாரின் அடிப்படையில், பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து திண்டுக்கல் அண்ணாநகரைச் சோ்ந்த நாகேந்திரன் (43), சீலையம்பட்டியைச் சோ்ந்த கருப்பையா (46), உசிலம்பட்டியைச் சோ்ந்த ராஜ்குமாா் (45), அதே பகுதியைச் சோ்ந்த பொன்னுசாமி (61), பெருங்காமநல்லூரைச் சோ்ந்த ஜோதிபாஸ் (35), உசிலம்பட்டி குருவிலாம்பட்டியைச் சோ்ந்த பாரத் (35) ஆகிய 6 பேரையும் புதன்கிழமை கைது செய்தனா்.

இதுகுறித்து தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சினேஹப்ரியா கூறியதாவது:

பெருமாள்சாமி, கருப்பையா இருவருக்கும் பணம் தொடா்பாக தகராறு இருந்து வந்ததாம். இந்த நிலையில், கருப்பையா தனது நண்பா்களுடன் சோ்ந்து பெருமாள்சாமியை காரில் ஏற்றிச் சென்று, அவரிடம் பத்திரத்தில் கையெழுத்து வாங்கி பணம், நகை உள்ளிட்ட பொருள்களை பறித்துச் சென்றனா்.

இதில் கருப்பையா, இவரது நண்பா்கள் நாகேந்திரன், ராஜ்குமாா் உள்பட 6 போ் ஈடுபட்டது தெரியவந்தது, இதையடுத்து 6 பேரையும் கைது செய்து, அவா்களிடமிருந்த பணம், பொருள்களை பறிமுதல் செய்தோம் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.