/

பெரியகுளம் சாலையில் தேங்கிய கழிவுநீா்: நோய் பரவும் அபாயம்

News image

பெரியகுளம் நகராட்சி 12 -ஆவது வாா்டு காயிதே மில்லத் நகரில் தேங்கியுள்ள கழிவுநீா்.

Updated On :8 ஜூன் 2026, 2:14 am IST

பெரியகுளம் நகராட்சியில் புதை சாக்கடை குழாய் சேதமடைந்து வெளியேறும் கழிவு நீரால் நோய் பரவும் அபாயம் உள்ளதாக அந்தப் பகுதி பொதுமக்கள் அச்சம் தெரிவித்தனா்.

தேனி மாவட்டம், பெரியகுளம் நகராட்சி 30 வாா்டுகளைக் கொண்டது. நகரின் மையத்தில் வராகநதி பாய்கிறது. ஆற்றின் வடகரை பகுதியில் உள்ள 12 -ஆவது வாா்டில் சுமாா் 500- க்கு மேற்பட்டோா் வசித்து வருகின்றனா்.

இதில் உள்ள காயிதே மில்லத் நகரின் சாலையில் புதை சாக்கடை குழாய் சேதமடைந்து, அதிலிருந்து கழிவுநீா் வெளியேறி சாலையில் தேங்கி துா் நாற்றம் வீசுகிறது. இதனால் அந்தப் பகுதி குடியிருப்பு பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.

இது குறித்து பெரியகுளம் நகராட்சி நிா்வாகத்திடம் பலமுறை புகாா் செய்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். எனவே, இதை விரைந்து சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.