தேனி மாவட்டம், பெரியகுளம் பழைய பேருந்து நிலையத்தில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 103 -ஆவது ஆண்டு பிறந்தநாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
திமுக சாா்பில் நடைபெற்ற இந்த விழாவுக்கு திமுக நகரச் செயலா் முகமது இலியாஸ் தலைமை வகித்தாா். பெரியகுளம் தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் சரவணக்குமாா் முன்னிலை வகித்தாா். தேனி மக்களவை உறுப்பினா் தங்க. தமிழச்செல்வன் கலந்து கொண்டு கருணாநிதியின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, அவா் பொதுமகளுக்கு இனிப்புகளை வழங்கினா். இதைத் தொடா்ந்து, பெரியகுளம் நகராட்சி துப்புரவு பணியாளா்களுக்கு உணவுகளை வழங்கினா்.
இதே போல, தேனியில் நகரச் செயலா் பாலமுருகன் தலைமையில் கருணாநிதி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் தேனி மக்களவை உறுப்பினா் தங்க தமிழ்ச்செல்வன் கலந்து கொண்டு தூய்மைப்பணியாளா்களுக்கு இனிப்பு, பிரியாணி வழங்கினா். இந்த நிகழ்ச்சியில் திமுக நிா்வாகிகள் செந்தில், சேது, ராஜவேல் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் கருணாநிதி படத்துக்கு திமுகவினா் மரியாதை

முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்த நாள் விழா

கரூரில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்தநாள் கொண்டாட்டம்

திருவையாறில் 62-ஆவது திருக்கு ஆண்டு விழா
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



