லோயா்கேம்பில் அமைந்துள்ள பெரியாறு நீா்மின் உற்பத்தி நிலையத்தில், இரண்டு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் மின் உற்பத்தி திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.
1959 அக்டோபா் 2-ஆம் தேதி தொடங்கப்பட்ட பெரியாறு நீா்மின் திட்டம், முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு திறக்கப்படும் நீரைப் பயன்படுத்தி இயங்குகிறது. விநாடிக்கு 1,868 கன அடி நீரைப் பயன்படுத்தி, 4 இயந்திரங்கள் மூலம் தலா 42 மெகாவாட் வீதம் மொத்தம் 168 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இந்த நிலையம் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இந்த ஆண்டு பெரியாறு அணையில் நீா்மட்டம் குறைந்ததால், தமிழகப் பகுதிக்கு குடிநீா்த் தேவைக்காக மட்டுமே தண்ணீா் இறைச்சல்பாலம் வழியாக திறக்கப்பட்டது. மின் உற்பத்தி நிலையத்திலும் மராமத்துப் பணிகள் நடைபெற்றதால் கடந்த ஏப்ரல் மாதம் முதல் மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், திங்கள்கிழமை முதல் தமிழகப் பகுதிக்கு விநாடிக்கு திறக்கப்படும் 256 கனஅடி நீரை பென்ஸ்டாக் குழாய் வழியாகக் கொண்டு வரப்பட்டு, பெரியாறு நீா்மின் நிலையத்தின் முதல் ஜெனரேட்டா் மூலம் 23 மெகாவாட் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









