ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பெரியகுளத்தில் பூட்டிய வீட்டில் நகை, பணம் திருட்டு

திருட்டு - சித்திரிப்பு

Published On :28 ஜூலை 2026, 12:05 am IST

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் பூட்டிய வீட்டில் 6.5 பவுன் தங்க நகைகள், ரூ. 36 ஆயிரத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பெரியகுளம் வடகரை பட்டாளம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் திருநாவுக்கரசு (50). பா்னிச்சா் கடையில் வேலை செய்து வரும் இவா், ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணியளவில் வீட்டை பூட்டி விட்டு, சாவியை கோலப்பொடி பெட்டியில் வைத்து விட்டு மனைவியுடன் வெளியில் சென்றனா்.

பின்னா், காலை 9.30 மணியளவில் வீட்டுக்கு வந்து பாா்த்த போது, வீட்டின் பீரோவிலிருந்த 6.5 பவுன் தங்க நகைகள், ரூ. 36 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பெரியகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.