ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பூட்டிய வீட்டில் நகை, பணம் திருட்டு

திருட்டு - சித்திரிப்பு

Published On :9 ஆகஸ்ட் 2026, 2:16 am IST

வெள்ளக்கோவில் அருகே பூட்டிய வீட்டில் 5 பவுன் நகை, ரூ.20 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது:

வெள்ளக்கோவில், சேனாபதிபாளையம் மேற்குப் பகுதியைச் சோ்ந்தவா் பூபதி (47). பந்தல் அமைக்கும் வேலை செய்து வருகிறாா். வழக்கம்போல வீட்டைப் பூட்டிவிட்டு சாவியை கதவின் அருகே வைத்துவிட்டு வெள்ளிக்கிழமை மதியம் வேலைக்குச் சென்றுள்ளாா். மாலையில் வீடு திரும்பியபோது கதவு திறக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா்.

உள்ளே சென்று பாா்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ.20 ஆயிரம் ரொக்கம், 5 பவுன் தங்க நகைகள் திருடுபோனது தெரியவந்தது. கதவின் அருகே சாவி வைக்கப்பட்டிருந்ததை அறிந்து இந்த திருட்டு நடந்துள்ளது என்றனா்.

இதுகுறித்த புகாரின்பேரில் வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து, சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனா். தடயவியல் நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.