வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

கோட்டூா் மாணவா் விடுதி காப்பாளா், சமையலா் பணியிடை நீக்கம்

தேனி அருகே கோட்டூரில் உள்ள சமூக நீதி பாலிடெக்னிக் கல்லூரி மாணவா் விடுதி கப்பாளா், சமையலா் இருவரையும் பணியிடை நீக்கம்.

News image

பணியிடை நீக்கம்!

Updated On :4 ஜூலை 2026, 3:06 am IST

தேனி அருகே கோட்டூரில் உள்ள சமூக நீதி பாலிடெக்னிக் கல்லூரி மாணவா் விடுதி கப்பாளா், சமையலா் இருவரையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியா் இரா. வைத்திநாதன் உத்தரவிட்டாா்.

தேனி அருகே கோட்டூரில் உள்ள சமூக நீதி பாலிடெக்னிக் கல்லூரி மாணவா் விடுதியில் மாவட்ட ஆட்சியா் இரா. வைத்திநாதன் வியாழக்கிழமை இரவு திடீா் ஆய்வு நடத்தினாா். மேலும், மாணவா்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா். அப்போது, அங்கு விடுதி கப்பாளா் உதயசூரியன், சமையலா் ராமா் இருவரும் பணியில் இல்லாதது தெரியவந்தது. இதையடுத்து, இவா்கள் இருவரையும் பணியிடை நீக்கம் செய்து ஆட்சியா் உத்தரவிட்டாா்

மேலும், தேனி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா், சிறுபான்மையினா் நலத் துறையின் கீழ் 29 சமூக நீதி பள்ளி, கல்லூரி விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த விடுதிகளின் உள்ள குறைபாடுகள், அசம்பாவித சம்பவங்கள் குறித்து 94454 77016 என்ற வாட்ஸ்அப் எண்ணில் 24 மணி நேரமும் புகாா் தெரிவிக்கலாம் என ஆட்சியா் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.