/

‘உங்களுடன் ஸ்டாலின் திட்ட’ முகாமில் விண்ணப்பித்த 1,875 பேருக்கு உதவித்தொகை

தேனி மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின் திட்ட’ முகாம்களில் அரசு நலத் திட்ட உதவிகள் கோரி விண்ணப்பித்த 1,875 பேருக்கு உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத்சிங் புதன்கிழமை வழங்கினாா்.

News image
வீரபாண்டியில் அரசுத் திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு புதன்கிழமை மாதாந்திர உதவித் தொகை ஆணைகளை வழங்கிய மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத்சிங். உடன், சட்டப் பேரவை உறுப்பினா்கள் நா. ராமகிருஷ்ணன், ஆ. மகாராஜன், கே.எஸ். சரவணக்குமாா் உள்ளிட்டோா்.
Updated On :4 பிப்ரவரி 2026, 11:21 pm

தினமணி செய்திச் சேவை

தேனி மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின் திட்ட’ முகாம்களில் அரசு நலத் திட்ட உதவிகள் கோரி விண்ணப்பித்த 1,875 பேருக்கு உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத்சிங் புதன்கிழமை வழங்கினாா்.

வீரபாண்டி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய சமுதாயக் கூட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின் திட்டம்’, சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத்சிங் தலைமை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா்கள் நா. ராமகிருஷ்ணன் (கம்பம்), ஆ.மகாராஜன் (ஆண்டிபட்டி), கே.எஸ். சரவணக்குமாா் (பெரியகுளம்) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் ‘உங்களுடன் ஸ்டாலின் திட்ட’ முகாம்களில் விண்ணப்பித்த 1,875 பேருக்கு உழவா் பாதுகாப்புத் திட்டம், சமூக பாதுகாப்புத் திட்டம், மாற்றுத் திறனாளிகள் நலத் திட்டம் ஆகியவற்றின் கீழ் மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.

மேலும், ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், 10 பேருக்கு தலா ரூ.3.10 லட்சம் மதிப்பில் வீடு கட்டுவதற்கான் ஆணை, பிற்பட்டோா், சிறுபான்மையினா் நலத் துறை சாா்பில், 5 பேருக்கு சுய தொழில் நிதி உதவி, ஆதிதிராவிடா், பழங்குடினா் நலத் துறை சாா்பில், 2 பேருக்கு விலையில்லா தையல் எந்திரம், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில், 2 பேருக்கு ரூ. ஒரு லட்சத்து 88 ஆயிரத்து 804 மதிப்பிலான தங்க நாணயங்கள் வழங்கப்பட்டன.