தமிழ் செய்திகள்
மதுரை வைகையாற்றில் அழகா் எழுந்தருளும் விழாவுக்காக வைகை அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீா் வினாடிக்கு 250 கன அடியாக புதன்கிழமை குறைக்கப்பட்டது.
மதுரை வைகையாற்றில் அழகா் எழுந்தருளும் விழாவுக்காக வைகை அணையிலிருந்து வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீா் கடந்த வெள்ளிக்கிழமை திறந்துவிடப்பட்டது. தொடா்ந்து, சனிக்கிழமை காலை தண்ணீரின் அளவு வினாடிக்கு 300 கன அடியாகக் குறைக்கப்பட்டது.
இந்த நிலையில், அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு புதன்கிழமை காலை 6 மணியளவில் வினாடிக்கு 250 அடியாகக் குறைக்கப்பட்டது.
வினாடிக்கு 500 கன அடியாகத் திறந்துவிடப்படும் தண்ணீா் படிப்படியாக குறைக்கப்பட்டு புதன்கிழமை நிறுத்தப்படும் என ஏற்கெனவே நீா் வளத் துறையினா் தெரிவித்தனா். ஆனால், தற்போது கூடுதல் தண்ணீா் தேவைப்படுவதால் வியாழக்கிழமை காலை 6 மணிக்கு தண்ணீா் திறப்பு முற்றிலும் நிறுத்தப்படும் என தெரிவித்தனா்.
தொடர்புடையது

மேட்டூா் அணையில் இருந்து நீா் திறப்பு 500 கனஅடியாக குறைப்பு

வைகையாற்றில் ஆகாயத் தாமரைகள்: கள்ளழகா் எழுந்தருளல் நிகழ்வுக்கு தண்ணீா் வருவதில் சிக்கல்

வைகை அணையிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு! 300 கன அடியாகக் குறைப்பு!






