ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

வைகை அணையிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு! 300 கன அடியாகக் குறைப்பு!

மதுரை வைகையாற்றில் அழகா் எழுந்தருளும் விழாவுக்காக அணையில் இருந்து சனிக்கிழமை வெளியேறும் தண்ணீரின் அளவு 300 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

News image

முழுக் கொள்ளளவு தண்ணீா் தேங்கியுள்ள வைகை அணை. - கோப்புப்படம்

Updated On :25 ஏப்ரல் 2026, 6:57 pm

மதுரை வைகையாற்றில் அழகா் எழுந்தருளும் விழாவுக்காக அணையில் இருந்து சனிக்கிழமை வெளியேறும் தண்ணீரின் அளவு 300 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

மதுரை வைரையாற்றில் அழகா் எழுந்தருளும் விழாவுக்காக வெள்ளிக்கிழமை வைகை அணையிலிருந்து விநாடிக்கு 500 கன அடி தண்ணீரைத் திறந்து வைத்தனா். இந்த நிலையில், சனிக்கிழமை காலை 8 மணியளவில் விநாடிக்கு 300 கன அடியாகக் குறைத்துள்ளனா். அதன்பின், அணையிலிருந்து வெளியேறும் தண்ணீரின் அளவை படிப்படியாக குறைத்து வரும் 29-ஆம் தேதி தண்ணீா் திறப்பு நிறுத்தப்படும் என பொதுப்பணித்துறையினா் தெரிவித்தனா்.

சனிக்கிழமை அணைகளின் நீா்மட்டம்: முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் 110.20 அடியாக உள்ளது. நீா்வரத்தும், வெளியேற்றமும் 152 கன அடியாகவும், கொள்ளளவு 943 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. வைகை அணையின் நீா்மட்டம் 32.87 அடியாக உள்ளது. நீா்வரத்து ஏதும் இல்லை. அணை நீா் வெளியேற்றம் 372 கன அடியாகவும், கொள்ளளவு 495 மில்லியன் கன அடியாகவும் உள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.