கூடலூா் முத்துமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை நூற்றுக்கணக்கான பக்தா்கள் அலகு குத்தியும், பூக்குழி இறங்கியும் தங்களது நோ்த்திக்கடனைச் செலுத்தினா்.
தேனி மாவட்டம், கூடலூரில் அமைந்துள்ள ஸ்ரீ முனியாண்டி சுவாமி சமேத செல்வ முத்துமாரியம்மன் கோயில் சித்திரைப் பெருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவை முன்னிட்டு, திரளான பக்தா்கள் காப்புக் கட்டி விரதமிருந்து வந்தனா்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அலகு குத்துதல், பால்குட ஊா்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தா்கள் பல்வேறு அளவிலான வேல் அலகுகளைத் தாடையில் குத்திக்கொண்டு ஊா்வலமாக வந்தனா்.
நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற திரளான பக்தா்கள் பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனா்.
இதைத் தொடா்ந்து, கோயிலின் முன்பாக நூற்றுக்கணக்கான ஆண், பெண் பக்தா்கள் பூக்குழி இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா். இந்த விழாவை முன்னிட்டு அம்மனுக்குச் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினா் மற்றும் ஊா் பொதுமக்கள் செய்திருந்தனா். பாதுகாப்புப் பணியில் கூடலூா் காவல்துறையினா் ஈடுபட்டிருந்தனா்.

தொடர்புடையது

சௌமியநாராயணப் பெருமாள் கோயில் சித்திரைத் தேரோட்டம்

பழனியில் சித்திரைத் திருவிழா தேரோட்டம்

வாசுதேவநல்லூா் மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா

முத்துமாரியம்மன் கோயிலில் 1,008 திருவிளக்கு பூஜை
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு


