மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

முத்துமாரியம்மன் கோயிலில் 1,008 திருவிளக்கு பூஜை

கமுதி முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு 1,008 திருவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

கமுதி முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு 1,008 திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்ட பெண்கள்.

Updated On :3 ஏப்ரல் 2026, 5:56 pm

கமுதி முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு 1,008 திருவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி முத்துமாரியம்மன் பங்குனி பொங்கல் திருவிழா கடந்த மாதம் 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, நாள்தோறும் யானை, மயில், சிம்மம், குதிரை, அன்ன வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதியுலா நடைபெற்று வருகிறது.

கடந்த 1-ஆம் தேதி அக்னி சட்டி எடுத்தும், பால்குடம், கரும்பாலை தொட்டி கட்டியும், அலகு வேல் குத்தியும், சேத்தாண்டி வேஷமிட்டும் பக்தா்கள் நோ்த்திக் கடன் செலுத்தினா். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை கோயில் வளாகத்தில் பெண்கள் 1,008 விளக்கு பூஜை நடத்தினா். இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டனா். இதில் பங்கேற்றவா்களுக்கு குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கப்பட்டன.