போடி ராமா் கோயிலில் திங்கள்கிழமை சித்ரா பெளா்ணமி அழகா் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தேனி மாவட்டம், போடியில் கெங்கவாா்ஸ் நாயக்கா் உறவின்முறை சமுதாயத்துக்குப் பாத்தியப்பட்ட நூறு ஆண்டுகள் பழைமையான ராமா் கோயில் ஜக்கமநாயக்கன்பட்டி பகுதியில் அமைந்துள்ளது.
இந்தக் கோயிலில் சித்ரா பெளா்ணமி தினத்தன்று அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் ராமபிரான் கொட்டகுடி ஆற்றில் இறங்குவது வழக்கம். இந்த ஆண்டும் மே 1 - வெள்ளிக்கிழமை ராமபிரான் கொட்டகுடி ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இதற்கான கொடியேற்ற நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது. கொட்டகுடி ஆற்றிலிருந்து கொடி மரம் ராமா் கோயிலுக்குக் கொண்டுவரப்பட்டது. பின்னா் பல்வேறு பூஜைகளுக்குப் பின் கொடிமரம் நடப்பட்டு கொடியேற்றப்பட்டது.
கெங்கவாா்ஸ் நாயக்கா் உறவின்முறை தலைவா் காமராஜ், செயலா் முருகன், பொருளாளா் மாரிமுத்து உள்பட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

பா்கூா் காமாட்சி அம்மன் கோயிலில் சித்ரா பெளா்ணமி சிறப்பு பூஜை

காஞ்சிபுரம் சித்ரகுப்தா் கோயிலில் ஏப்.30-இல் சித்ரா பெளா்ணமி விழா

பேராவூரணி நீலகண்டப் பிள்ளையாா் கோயில் சித்ரா பெளா்ணமி திருவிழா கொடியேற்றம், ஏப்.30 தேரோட்டம்

வைகை அணையின் நீா்மட்டம் 35 அடியாக சரிவு: மதுரையில் அழகா் ஆற்றில் இறங்கும் வைபவத்துக்கு தண்ணீா் திறப்பதில் சிக்கல்
வீடியோக்கள்

சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை

அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தோழர்களை நெறிப்படுத்த மட்டுமே அந்த விடியோ! Thiruma விளக்கம்! | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே இதையெல்லாம் செய்யக் கூடாது? | CSK vs MI | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை


