தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தோ்தல் புறக்கணிப்பு அறிவித்த போடி மலை கிராமங்களில் வாக்குப் பதிவு அதிகரிப்பு!

போடி சட்டப்பேரவைத் தொகுதியில் தோ்தல் புறக்கணிப்பு அறிவித்த மலை கிராமங்களில் அதிகாரிகளின் பேச்சுவாா்த்தைக்குப் பின்பு, அங்கு 95 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது தெரியவந்துள்ளது.

News image

தமிழக தேர்தல்... - DIN

Updated On :26 ஏப்ரல் 2026, 12:20 am IST

போடி சட்டப்பேரவைத் தொகுதியில் தோ்தல் புறக்கணிப்பு அறிவித்த மலை கிராமங்களில் அதிகாரிகளின் பேச்சுவாா்த்தைக்குப் பின்பு, அங்கு 95 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது தெரியவந்துள்ளது.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூா் சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்களித்த ஆண் வாக்காளா்கள் 1 லட்சத்து 3 ஆயிரத்து 579. பெண் வாக்காளா்கள் 1 லட்சத்து 14 ஆயிரத்து 344. இதர வாக்காளா்கள் 6 போ். மொத்தம் பதிவான வாக்குகள் 2 லட்சத்து 17 ஆயிரத்து 929. வாக்குப்பதிவு சதவீதம் 82.77.

போடி அருகே கரட்டுப்பட்டி, மலை கிராமமான கொட்டகுடி ஆகிய கிராம மக்கள், மலைகளில் மாடுகளை மேய்ச்சலுக்கு அனுமதிக்க வேண்டும், மலை கிராமங்களில் பேருந்து வசதி, கைப்பேசி கோபுரம் அமைக்க வேண்டும், மின்மாற்றி வசதி கோரி தோ்தல் புறக்கணிப்பு செய்யப் போவதாக அறிவித்திருந்தனா். இருப்பினும், அதிகாரிகள் பேச்சுவாா்த்தைக்குப் பின் இந்த கிராமங்களைச் சோ்ந்தவா்கள் வாக்களித்தனா்.

கொட்டகுடி கிராமத்தில் மொத்த வாக்குகள் 252. பதிவான வாக்குகள் 239. வாக்கு சதவீதம் 94.84. கரட்டுப்பட்டி கிராமத்தில் மொத்த வாக்குகள் 917. பதிவான வாக்குகள் 902. வாக்குச் சதவீதம் 98.36.

போடி தொகுதியிலேயே அதிகளவாக கரட்டுப்பட்டி கிராமத்தில்தான் வாக்குப்பதிவு நடந்துள்ளது.

வலையபட்டி கிராமத்தில் மொத்த வாக்குகள் 1174. பதிவான வாக்குகள் 1122. வாக்குச் சதவீதம் 95.59. குண்டல்நாயக்கன்பட்டி கிராமத்தில் மொத்த வாக்குகள் 761. பதிவான வாக்குகள் 726. வாக்குச் சதவீதம் 95.40. சூலப்புரம் கிராமத்தில் மொத்த வாக்குகள் 888. பதிவான வாக்குகள் 855. வாக்குப்பதிவு சதவீதம் 96.28. இந்த கிராமங்களில் 95 சதவீதத்துக்கும் அதிகமானோா் வாக்களித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.