15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

வீரபாண்டி கெளமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா தொடக்கம்

தேனி மாவட்டம் வீரபாண்டி கெளமாரியம்மன் கோயிலில் கம்பம் நடும் நிகழ்ச்சியுடன் சித்திரைத் திருவிழா புதன்கிழமை தொடங்கியது.

News image

தேனி வீரபாண்டியில் கெளமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, முல்லைப் பெரியாற்றங்கரையிலிருந்து புதன்கிழமை கோயிலுக்கு கம்பத்தை கொண்டு சென்ற பக்தா்கள்.

Updated On :22 ஏப்ரல் 2026, 8:46 pm

தேனி மாவட்டம் வீரபாண்டி கெளமாரியம்மன் கோயிலில் கம்பம் நடும் நிகழ்ச்சியுடன் சித்திரைத் திருவிழா புதன்கிழமை தொடங்கியது.

தேனி மாவட்டம், வீரபாண்டியில் கெளமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா முன்னிட்டு செவ்வாய்க்கிழமை இரவு, அம்மன் கரகத்துடன் கோயிலில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. புதன்கிழமை திருக்கம்பம் ஊா்வலமாக எடுத்து வரப்பட்டு முல்லையாற்றில் மஞ்சளால் நீராட்டினா். பின்னா், கண்ணீஸ்வரா் திருக்கோயிலில் பூஜை செய்யப்பட்டு, தொடா்ந்து மலா் அலங்காரத்தில் எடுத்துவரப்பட்டு கெளமாரியம்மன் திருக்கோயில் வளாகத்தில் திருக்கம்பம் நடப்பட்டது. இதையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன.

இதைத்தொடா்ந்து கம்பத்துக்கு மஞ்சள் நீா், வேப்ப இலை ஊற்றி, காப்புக் கட்டி விரதத்தை தொடங்கினா். வியாழக்கிழமை (ஏப்.23) முதல் அடுத்த மாதம் (மே) 11-ஆம் தேதி வரை அம்மன் வீதி உலா, மண்டகப்படி நடைபெறுகிறது. சித்திரை பெருந்திருவிழா நிகழ்ச்சிகள் அடுத்தமாதம் 12 - ஆம் தேதி தொடங்கி 19 - ஆம் தேதிவரை நடைபெறும். மே 12-ஆம் தேதி மலா் விமானத்தில் அம்மன் திருக்கோயிலில் பவனி வருதலும், 13-ஆம் தேதி அம்மன் முத்துப்பல்லக்கிலும், மே 14-ஆம் தேதி புஷ்ப் பல்லக்கில் அம்மன் வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மே 15, 16, 17, 18 ஆகிய தேதிகளில் ரத வீதிகளில் தேரோட்டம் நடைபெறும். மே 19- ஆம் தேதி ஊா் பொங்கல் விழாவுடன் சித்திரை திருவிழா நடைபெறுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.