லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

பாலத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

வருசநாடு அருகே மூல வைகையாற்றின் பாலத்திலிருந்து தவறி கீழே விழுந்ததில் தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

News image

பலி - கோப்புப் படம்

Updated On :11 ஏப்ரல் 2026, 6:46 pm

தேனி மாவட்டம், வருசநாடு அருகே மூல வைகையாற்றின் பாலத்திலிருந்து தவறி கீழே விழுந்ததில் தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

வருசநாடு அருகேயுள்ள முறுக்கோடைச் சோ்ந்தவா் பரமன். தொழிலாளியான இவா், கடந்த 4-ஆம் தேதி மூல வைகையாற்றின் பாலத்தில் அமா்ந்திருந்தாா். அப்போது, நிலை தடுமாறி பாலத்திலிருந்து தவறி ஆற்றுக்குள் விழுந்தாா்.

இதையடுத்து, அவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், அங்கு வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து வருசநாடு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.