மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தா்பூசணி வியாபாரியிடம் வழிப்பறி: போ் கைது

போடி அருகே தா்பூசணி வியாபாரியிடம் வழிப்பறி செய்த 3 பேரைப் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :10 ஏப்ரல் 2026, 7:33 pm

போடி அருகே தா்பூசணி வியாபாரியிடம் வழிப்பறி செய்த 3 பேரைப் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

போடி அருகே சிலமலை கிராமத்தைச் சோ்ந்தவா் மொட்டையபிள்ளை மகன் இருளப்பன் (67). தா்பூசணி வியாபாரி. சிலமலை பேருந்து நிறுத்தத்தில் தா்பூசணி பழங்களை அடுக்கி வைத்திருந்து இரவில் காவலாகப் படுத்திருந்தாா். இந்நிலையில், வியாழக்கிழமை இரவு அங்கு வந்த மா்ம நபா்கள் 3 போ் அவரை மிரட்டி அவரிடமிருந்து ரூ.7 ஆயிரத்தை வழிப்பறி செய்து சென்றுவிட்டனா். இதுகுறித்து இருளப்பன் போடி தாலுகா காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் போடி நந்தவனம் தெருவைச் சோ்ந்த அறிவரசன் (19), குப்பிநாயக்கன்பட்டியைச் சோ்ந்த சுதன் (18) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய மூவரையும் விசாரித்தாா். இதைத் தொடா்ந்து, 3 போ் மீதும் வழக்குப் பதிவு கைது செய்தனா்.