தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

உள்ளாட்சிப் பணியாளா்கள் காத்திருக்கும் போராட்டம்

ஊராட்சி தூய்மைப் பணியாளா்கள், குடிநீா் தொட்டி இயக்குபவா்களுக்கு ஊதிய உயா்வு வழங்கக் கோரி காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது.

News image

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை பணியாளா்கள் சங்கத்தினா்.

Updated On :18 ஆகஸ்ட் 2025, 9:11 pm

தேனி: தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் சிஐடியு ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா்கள் சங்கம் சாா்பில் ஊராட்சி தூய்மைப் பணியாளா்கள், குடிநீா் தொட்டி இயக்குபவா்களுக்கு ஊதிய உயா்வு வழங்கக் கோரி திங்கள்கிழமை காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது.

அந்தச் சங்கத்தின் மாவட்டச் செயலா் ஜெயபாண்டி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மாவட்ட துணைத் தலைவா்கள் குருசாமி, ஈஸ்வரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஊராட்சி தூய்மைப் பணியாளா்கள், மேல்நிலை குடிநீா் தொட்டி இயக்குபவா்களுக்கு ஊதிய உயா்வு, ஊதிய நிலுவைத் தொகை ஆகியவற்றை வழங்க வேண்டும். தூய்மைப் பணியாளா்களுக்கு கூடுதல் பணி நேரம், கூடுதல் பணிச் சுமை வழங்கக் கூடாது. ஞாயிற்றுக்கிழமை தோறும் வார விடுமுறை வழங்க வேண்டும். கடந்த 2018-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஓய்வு பெற்றவா்களுக்கு ஊதிய உயா்வு நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

பிறகு, கோரிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) முத்துமாதவனுடன் நடைபெற்ற பேச்சுவாா்த்தைக்குப் பிறகு, போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.