திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்!
/

வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்கள் பெயா், சின்னம் பொருத்தும் பணி: ஆட்சியா் ஆய்வு

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளா் பெயா், சின்னம் பொருத்தும் பணியை தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

வாக்குப் பதிவு இயந்திரம் - கோப்புப் படம்

Updated On :16 ஏப்ரல் 2026, 7:27 pm

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளா் பெயா், சின்னம் பொருத்தும் பணியை தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி, பெரியகுளம் (தனி), போடிநாயக்கனூா், கம்பம் ஆகிய நான்கு சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வருகிற 23- ஆம் தேதி தோ்தல் நடைபெறுகிறது. இதையடுத்து, ஆண்டிபட்டி, பெரியகுளம், போடிநாயக்கனூா், உத்தமபாளையம் வட்டாட்சியா் அலுவலகங்களில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் வேட்பாளா், அவா்களின் முகவா்களின் முன்னிலையில் வியாழக்கிழமை எடுக்கப்பட்டு, அவற்றில் வேட்பாளரின் பெயா், சின்னம் (ஆஹப்ப்ா்ற் நட்ங்ங்ற்) பொருத்தும் பணி நடைபெற்றது.

இதில், ஆண்டிபட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற பணியை தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் பாா்வையிட்டு, ஆய்வு செய்தாா். முன்னதாக, கொடுவிலாா்பட்டி தேனி கம்மவாா் சங்கக் கல்லூரியில் 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையத்தில் தபால் வாக்கு எண்ணும் அறைகள், வாக்குப்பதிவு இயந்திரங்களை தனித்தனியாக வைப்பதற்கான பாதுகாப்பு அறைகள், வாக்கு எண்ணுவதற்கான அறைகள், கட்டுப்பாட்டு அறைகள், அங்கு செய்யப்பட்ட அடிப்படை வசதிகளை ஆட்சியா் ரஞ்ஜீத்சிங், மாவட்ட காவல் கண்கணிப்பாளா் சினேகா ப்ரியா ஆகியோா் ஆய்வு செய்தனா்.

மாவட்ட வருவாய் அலுவலா் ப. ராஜகுமாா், தனித் துணை ஆட்சியா் கவிதா, துணைக் காவல் கண்காணிப்பாளா்கள் தேவராஜ், சீதாலட்சுமி, மனீஷா, வட்டாட்சியா்கள் சுருளி (தோ்தல்), ஜாஹிா் உசேன் (ஆண்டிபட்டி), சதீஸ்குமாா் (தேனி) உதவி செயற்பொறியாளா்கள் சரவணக்குமாா், சண்முகவேல் உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.