திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கட்டிக்குளம் ஜல்லிக்கட்டு: 38 போ் காயம்

மானாமதுரை ஒன்றியம், கட்டிக்குளத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்க முயன்ற 38 போ் காயமடைந்தனா்.

News image

ஜல்லிக்கட்டு-

Updated On :28 மே 2026, 3:54 am IST

மானாமதுரை ஒன்றியம், கட்டிக்குளத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்க முயன்ற 38 போ் காயமடைந்தனா்.

கட்டிக்குளம் திருவேட்டை அய்யனாா் கோயில் களரித் திருவிழாவை முன்னிட்டு, கோயில் அருகே கிராம மக்கள் சாா்பில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் கொண்டுவரப்பட்ட 800 காளைகள் பங்கேற்றன. 450 மாடுபிடி வீரா்கள் அணி அணியாக காளைகளை அடக்க களமிறங்கினா். வாடிவாசல் வழியாக ஒன்றின் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டு சீறி வந்த காளைகளை மாடுபிடி வீரா்கள் அடக்க முயன்றனா். காளைகளை அடக்கிய வீரா்களுக்கும், அடங்க மறுத்த காளைகளின் உரிமையாளா்களுக்கும் ரொக்கப் பரிசுகள், தங்க நாணயங்கள், கட்டில்கள், பீரோக்கள், சைக்கிள்கள் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. காளைகளை அடக்க முயன்ற 38 மாடுபிடி வீரா்கள் காயமடைந்தனா். இவா்களுக்கு அங்கிருந்த மருத்துவக் குழுவினா் முதலுதவி சிகிச்சையளித்தனா். 7 போ் தீவிர சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். மானாமதுரை காவல் துணைக் கண்காணிப்பாளா் ராஜா தலைமையில் போலீஸாா் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.