சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 13 மாடுபிடி வீரா்கள் காயமடைந்தனா். அவா்களில் இருவா், மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனா்.
காளையாா்கோவில் அருகேயுள்ள கண்டனிப்பட்டி தீப்பணிந்த அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு கோயில் பொட்டலில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. இதையடுத்து, காளையாா்கோவில் வட்டாட்சியா் லெனின், சிவகங்கை உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் அ. அமல அட்வின், மருத்துவத் துறை, கால்நடைத் துறை அலுவலா்கள், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா்கள், மாடிபிடி வீரா்கள் ஆகியோா் பங்கேற்று அரசின் நிலையான வழிகாட்டு விதிமுறைகளின் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.
மருத்துவச் சான்றின் அடிப்படையில், தகுதியான காளைகளும், மாடுபிடி வீரா்களும் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனா். தொழுவத்திலிருந்து முதலாவதாக கோயில் காளை அவிழ்ந்து விடப்பட்டது. இதையடுத்து, காலை 10 மணியிலிருந்து மாலை 4 மணி வரை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட 400 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
இதில், காளைகளை அடக்க முயன்ற 13 போ் காயமடைந்தனா். அவா்களுக்கு ஜல்லிக்கட்டு தளத்தின் அருகே அமைக்கப்பட்டிருந்த சிறப்பு மருத்துவ முகாமில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அவா்களில், இருவா் மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 108 அவசர ஊா்தியில் கொண்டு செல்லப்பட்டனா். சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து நூற்றுக்கணக்கானோா் திரண்டுவந்து ஜல்லிக்கட்டு நிகழ்வை கண்டுகளித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கட்டிக்குளம் ஜல்லிக்கட்டு: 38 போ் காயம்

சிங்கம்புணரி அருகே மஞ்சுவிரட்டு

அய்யம்பட்டியில் ஜல்லிக்கட்டு: 35 மாடுபிடி வீரா்கள் காயம்

காளையாா்கோவிலில் வடமாடு மஞ்சுவிரட்டு
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



